



முத்தமிழ் முருகன் மாநாட்டின் நோக்கம்
உலக நாடுகளில் திருமுருக வழிபாடு சிறப்பாக நடைபெறுகிறது. இந்தியா, இலங்கை, மலேசியா, மியான்மர், சிங்கப்பூர், ஆஸ்திரேலியா, மொரீசியஸ், இங்கிலாந்து, அமெரிக்கா, சுவிட்சர்லாந்து, நியூசிலாந்து, தென்னாப்பிரிக்கா, கனடா, இந்தோனேசியா போன்ற நாடுகளில் தனித்துவம் பெற்ற வழிபாடாக சிறந்து விளங்குகிறது. ஆகவே, உலக முருக பக்தர்களையும் சிந்தனையாளர்களையும் ஒருங்கிணைத்து தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறை இம்மாநாட்டுக்கு ஏற்பாடு செய்துள்ளது.

பங்கேற்பாளர்கள்
மாநாட்டில் கலந்து கொள்ள விரும்பும் உள்நாடு மற்றும் அயல்நாட்டு பங்கேற்பாளர்கள் முருகப் பெருமானின் திருவருளைப் பெற ஒன்றிணைவோம்.
ஆய்வுக் கருத்தரங்கத்திற்குரிய தலைப்புகள்
உலகெங்கும் நிலவும் முருக வழிபாடு
இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் முருகன்
சங்க இலக்கியங்களில் சேயோன், மற்றும் முருகன் இலக்கியங்களில் வழிபாடு
கல்வெட்டுகளில் முருகவேள்
வேத மரபிலும், தமிழ் மரபிலும் முருக வழிபாடு
சித்தர்கள் தலைவன், செந்தமிழ் முருகன்
நாட்டார் வழக்காறுகளில் முருக வழிபாடு
சேய்த் தொண்டர் புராணம் மற்றும் பல்வேறு இலக்கியங்களில் முருகனடியார்கள்
வடமொழி இலக்கியங்களில் தென்தமிழ் முருகன்
முருகனும் முத்தமிழும்
முருகன் அடியார்கள் பலர் குறித்த முக்கியத் தகவல்கள், செய்திகள், திருப்பணிகள் போன்றவை
மாநாட்டிற்கான ஒருங்கிணைப்புக் குழு

அருள்மிகு
தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில்
பழனி என்னும் இத்திருத்தலம் சங்க காலத்தில் ‘பொதினி’ என்றும் ‘பழனம்’ என்றும் வழங்கப் பெற்றுள்ளது. திருமுருகாற்றுப்படையில் ‘திருவாவினன்குடி’ என அழைக்கப்படுகிறது. அகநானூறு மற்றும் சிலப்பதிகாரதில் இத்தலம் பற்றிய குறிப்புகள் காணப்படுகிறது.

2
நாட்கள்

100+
வழங்குபவர்கள்

20000+
பங்கேற்பாளர்கள்

300+
அயலக பங்கேற்பாளர்கள்
முத்தமிழ் முருகன் மாநாடு
முகவரி
அருள்மிகு தண்டாயுதபாணிசுவாமி திருக்கோயில்,
பழனி – 624601
திண்டுக்கல் மாவட்டம் [TM032203]