கருத்தரங்க ஆய்வுக்களங்கள்
- உலகெங்கும் நிலவும் முருக வழிபாடு
- இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் முருகன்
- சங்க இலக்கியங்களில் சேயோன், மற்றும் முருகன் இலக்கியங்களில் வழிபாடு
- கல்வெட்டுகளில் முருகவேள்
- வேத மரபிலும், தமிழ் மரபிலும் முருக வழிபாடு
- சித்தர்கள் தலைவன், செந்தமிழ் முருகன்
- நாட்டார் வழக்காறுகளில் முருக வழிபாடு
- சேய்த் தொண்டர் புராணம் மற்றும் பல்வேறு இலக்கியங்களில் முருகனடியார்கள்
- வடமொழி இலக்கியங்களில் தென்தமிழ் முருகன்
- முருகனும் முத்தமிழும்
- முருகன் அடியார்கள் பலர் குறித்த முக்கியத் தகவல்கள், செய்திகள் மற்றும் திருப்பணிகள் போன்றவை.
மேலும் விவரங்களுக்கு...
கீழ்க்காணும் தலைப்புகளில் ஆழமாக ஆய்வு செய்தும் கட்டுரைகள் வழங்கலாம்.
- முருக வழிபாட்டின் வளர்ச்சிக்கு உதவிய, வெளிச்சத்திற்கு வராத பல்வேறு அடியார்கள், நூல்கள், கலைப்படைப்புகள் குறித்த தரவுகள்.
- காளிதாசனின் குமாரசம்பவம், ஆதிசங்கரரின் சுப்ரமணிய புஜங்கம், வடமொழியில் உள்ள ஸ்காந்தம் இவற்றுடன் தமிழில் உள்ள முருக இலக்கியங்களை இணைத்துச் சிந்திக்கலாம்.
- முருக பக்தர்களில் திருப்புகழ் பரவக் காரணமான தணிகை செங்கல்வராயனார், திருமுருக கிருபானந்த வாரியார், பிற சேய்த்தொண்டர் புராண அடியார்கள், பித்துக்குளி முருகதாஸ் மற்றும் டில்லி இராகவன் குருஜீ போன்ற முருகனடியார்கள் பணி குறித்து விளக்கலாம்.
- முருகன் திருக்கோயில்களுக்கு உதவிய பல்வேறு வள்ளல்கள் குறித்தும் (சாண்டோ சின்னப்பத்தேவர் போன்றோர்) எழுதலாம்.
- தீவிர முருகன் தொண்டர்கள் குறித்தும் பதிவுகள் செய்யலாம்.
- கட்டுரைகள், சொற்பொழிவு போன்றவை மூலம் திருமுருகன் திருப்பணி செய்த இலக்கியவாதிகள், சமயத் தலைவர்கள் வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள், சிதம்பரம் சுவாமிகள், குமரகுருபரர், கி.வா. ஜகந்நாதன், கந்தசாமி சுவாமிகள் போன்ற பெரியோர்கள் பணிகள் குறித்து பதிவு செய்யலாம்.
- இசைக்கும், முருகனுக்கும் உள்ள தொடர்புகள். வள்ளித்திருமணம், காவடியாட்டங்கள், குறத்தி நடனங்கள், வேட்டுவர்கள் வெறியாட்டம் மற்றும் நுட்பமான சிற்பங்கள் இவை குறித்த செய்திகள் இருக்கலாம்.
அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு-2024
கட்டுரைகள் எழுதுவதற்கான வழிமுறைகள்
- அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு 2024 என்ற பொருண்மையில் நடைபெறும் இம்மாநாட்டிற்கு முருகன் தொடர்பான ஆய்வுக்கட்டுரைகள் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும்.
- கட்டுரைகள் 6 பக்கங்களுக்கு மிகாமல் அமைய வேண்டும். பக்கத்தின் அளவு A4 அச்சில் 1.5 வரி இடைவெளியில் எழுத்தளவு 12 ( Font Size-12) அமைதல் வேண்டும்.
- கட்டுரைகள் தமிழிலோ அல்லது ஆங்கிலத்திலோ இருக்கலாம். கட்டுரைகள் மின்னச்சு (word file) வடிவில் இருத்தல் வேண்டும்.
- தமிழ் யூனிக்கோடு (Unicode) எழுத்துருவிலும் ஆங்கிலம் டைம்ஸ் நியூ ரோமன் (Times New Roman) எழுத்துருவிலும் அமைதல் வேண்டும்.
- கட்டுரையில் மேற்கோள் குறிப்புகள் சான்றெண் விளக்கம் பார்வை நூல்கள் ஆய்வு நெறிமுறைப்படி அமைதல் வேண்டும்.
- கட்டுரையின் முன்பக்கத்தில் கட்டுரைத் தலைப்பு, கட்டுரையாளரின் பெயர் மற்றும் தகுதிப்பாடுகள் போன்ற விவரக்குறிப்புகள் அளிக்கப்பட வேண்டும். வேண்டிய விவரங்கள் – பெயர், முகவரி, எந்த நிறுவனம், கடவுச் சீட்டு எண் (Passport Number), தொடர்பு எண், E-Mail முகவரி.
- கட்டுரையில் மின்னஞ்சல் முகவரி, கைபேசி எண், புலன எண் (WhatsApp) மற்றும் புகைப்படம் மிக அவசியம் இடம்பெற வேண்டும்.
- சுருக்கக்குறிப்பு மற்றும் முழுக் கட்டுரை இணையதளம் வாயிலாக வந்து சேர வேண்டிய இறுதி நாள்: 10.07.2024.
- கூடுதல் விவரங்களுக்கு mmm2024palani@gmail.com மின்னஞ்சலில் தெரிவிக்கலாம். மேலும் தொடர்பிற்கு:
முனைவர் வாசுகி – +91 96989 38862
முனைவர் தமிழரசி – +91 90950 32564
முனைவர் சசிக்குமார் – +91 94986 65116
முனைவர். எஸ்.கார்த்திகேயன்- +91 7397521683
முனைவர். மா. மீனாட்சி சுந்தரம் – +91 7010408481
மேலும் விவரங்களுக்கு 1800-425-1757 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம் -
தேர்ந்தெடுக்கப்படும் கட்டுரையாளர்கள் மட்டுமே பதிவுக் கட்டணம் இல்லாமல் அனுமதிக்கப்படுவர். தங்கள் கட்டுரை தேர்வு குறித்த தகவல் கட்டுரையாளர்களுக்கு பின்னர் தெரிவிக்கப்படும்.